பல்நோக்குக் கட்டுரைக் களஞ்சியம்

பல்நோக்குக் கட்டுரைக் களஞ்சியம்

Free

ISBN:

tamil11

Categories:

General Novel

File Size

1.40 MB

Format

epub

Language

tam

Release Year

2017
Favorite (0)

Synopsis

இணையம் இன்று உலக முழுவதும் பலகோடி மக்களின் பயன்பாட்டுத் தேவைகளைப் பூர்த்திசெய்யும் புதுக்கண்டுப்பிடிப்பு என்று கூறலாம். மிகப்பழைய தகவல்களையும், இன்று புதிதாகத்தோன்றக் கூடிய பலபுதிய தகவல்களையும் பெற இணையம் உதவிவருகின்றது. தகவல்களை அனுப்புவதற்கும், தகவல்களைப் பெறுவதற்கும், கருத்துகளைத் தெரிவிக்கவும், வாங்கவும், விற்கவும், கற்பனைச் செய்து பார்க்க முடியாத அளவிற்கு இணையத்தில் தகவல்கள் குவிந்துகிடக்கின்றன. “எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார் திண்ணியர் ஆகப்பெறின்” ( குறள் – 666) என்ற குறளில் எண்ணியவர் எண்ணியபடியே செயல் ஆற்றுவதில் உறுதியுடையவராக, இருக்கப்பெற்றால் அவர் எண்ணியவற்றை எண்ணியவாறே அடைவார் என்று திருவள்ளுவர் குறிப்பிடுவதுபோல், நீங்கள் எதைப்பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும் என்று விரும்புகின்றீர்களோ! அதனை இணையத்தில் சென்று ஒருசில நொடிகளில் தேடித் தெரிந்து கொள்ளலாம். “கல்தோன்றி மண்தோன்றா காலத்துக்கு முந்தைய மொழி” எனபோற்றப்படும் தமிழ்மொழியானது ஓலைச்சுவடி காலம் தொடங்கி பல்வேறு விதமான காலகட்டங்களை கடந்து இணையம் வரைவளா்ந்து நிற்கிறது. இந்த விஞ்ஞாணயுகத்தில் ஆங்கில மொழிக்கு நிகராக தமிழ்மொழியும் கணினி மற்றும் இணையத்தில் வளா்ச்சியடைந்து விட்டது. இன்றைய தொழில் நுட்ப உலகத்தில் அச்சிட்ட புத்தகங்களைத் தவிர்த்துவிட்டு மின்புத்தகங்களை அதிகமாக வாசிக்கவும் உருவாக்கவும் கற்று கொண்டனர். ஒரு புத்தகத்தை காதால் கேட்டும், கண்களால் பார்த்து படிக்கும் அளவிற்கு மென்பொருட்கள் இணையத்தில் வளர்ச்சியடைந்துவிட்டது. இன்றைய நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், ஊர்ப்புறம் நகர்புறம் என பல நூலகங்கள் இருந்தாலும் அதை படிப்பவரின் எண்ணிக்கை மிககுறைவு தான். இணைய வளர்ச்சியின் காரணமாகவும் , திறன்பேசி, மடிக்கணினி ஆகிய கருவிகள் வளர்ந்து இருக்கும் நிலையில் இக்கருவிகளில் பல இலட்சம் புத்தகங்களை உள்ளடக்கச் செய்து, நினைத்த நேரத்தில் படிக்கும் அளவிற்கு தொழில் நுட்பம் வளர்ந்து இருக்கின்றன. எனவே இணையத்திலும் பல நூலகங்களை அமைத்து பல நூல்களைப் பதிவு செய்து வருகின்றனர். ஒரு மனிதன் வரையறுத்துக் கொண்ட ஒழுக்க முறைகளின் தொகுதியே முழுநிறை வடிவமே அறம் என்று கூறுவர். பிறவிதோறும் மனிதனைப் பற்றி பேசிக் கொண்டு வரும் தீவினையை அறுத்தெறிவதே அறம் என்று ஆன்மீகம் விளக்குவதுண்டு. அது போல் இலக்கியங்களில் கூறும் அற இலக்கியங்களின் கல்விச் சிந்தனை, நீதி இலக்கியங்கள் கூறும் அறக் கொள்கைகள், இல்லறம் கூறும் அறவியல் கோட்பாடு, வள்ளுவத்தில் சமுதாயம், திருக்குறளில் மனிதவாழ்வியல் கூறுகள் என்ற தலைப்புகளில் அற வாழ்வியலை எடுத்துரைக்கின்றது. கிராமப்புற மக்களிடயே காணப்படும் நாட்டுப்புற மருத்துவ முறைகளை கொண்டு இயற்கையுடன் வாழ்வதால் அவர்கள் கைக்கொண்ட வீட்டு வைத்தியம், பரம்பரை வைத்தியம், இயற்கை வைத்தியம், மூலிகை வைத்தியம், பச்சிலை வைத்தியம் எனப் பலவித வைத்தியமுறைகளை மற்றும் போயர் இன மக்களின் தெய்வ வழிபாட்டு மரபுகள், அவர்களது நாட்டுப்புற விளையாட்டுக் கலைகளான குரங்காட்டம், பேந்தா, கொத்தாட்டம் போன்றவை பற்றிய கள ஆய்வு செய்து தரவுகளுடன் எடுத்துரைக்கின்றேன். க.பிரகாஷ் எம்.ஏ., எம்.பிஃல்., (பிஎச்.டி) தொழில் நுட்பக் கள ஆய்வுப் பணியாளர் தமிழ்த்துறை பாரதியார் பல்கலைக்கழகம் கோயம்புத்தூர் – 46